அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் செல்போனை, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானசேகரின் வாட்ஸ் அப் சாட், செல்போன் தகவல்களை ஆய்வு செய்ய உள்ளனர். சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரிக்கவெரி செய்துள்ள நிலையில் வாட்ஸ் அப் சாட்கள் குறித்தும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.