இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட இருப்பதாக எழுந்த விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு தெளிவுபடுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் சேவைகளை நிறுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த திட்டத்தையும் வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் தன்கா எழுப்பிய இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதில் அளித்துள்ளார்.