"மோடி அலை இல்லை" - பாஜக வேட்பாளர் பேச்சு

59பார்த்தது
"மோடி அலை இல்லை" - பாஜக வேட்பாளர் பேச்சு
மோடி அலை எதுவும் வீசவில்லை என பாஜக வேட்பாளர் நவநீத் ராணா பேசியுள்ளது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பொது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும்போது, மோடி அலை என்ற பிம்பத்தில் சிக்கியிருக்காமல் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.