கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

72பார்த்தது
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?
திமுக அரசு பெறுப்பேற்றதிலிருந்து, கள்ளச்சாராயம் காய்ச்சியோர் மீது 4.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.61 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 565 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 16.51 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில், 14,606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி