எளிதாக செய்யக்கூடிய சில யோகா ஆசனங்கள்

65பார்த்தது
எளிதாக செய்யக்கூடிய சில யோகா ஆசனங்கள்
புதிதாக யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளவர்கள் எளிதாக செய்யக் கூடிய வகையிலான ஆசனங்களைக் காணலாம். தடாசனம்: மலை போல் நிற்கும் ஆசனமான தடாசனம் ஒரு ஆரம்ப நிலை ஆசனம் ஆகும். கைகளை உடலுடன் ஒட்டி வைத்து, கால்களை ஒன்றாகச் சேர்த்து வைத்து நேராக நிற்க வேண்டும். பின்னர் மூச்சை உள்ளிழுத்து தலைக்கு மேலே கைகளை உயர்த்திக் கைகூப்ப வேண்டும்.

வீரபத்ராசனம்: போர் வீரனின் போஸ் எனப்படும் வீரபத்ராசனம் செய்வதற்கு முதலில் நேராக நிற்க வேண்டும். பின்னர் ஒரு காலை பின்னால் தூக்கிவிட்டு முன்னங்காலை 90 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். பின்னர் தூக்கிய காலை நேராக நீட்டி கைகளைத் தோள்களுக்கு நேராக நீட்ட வேண்டும்.

தொடர்புடைய செய்தி