கால்நடை மருத்துவப்படிப்பு - விண்ணப்பப்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு

58பார்த்தது
கால்நடை மருத்துவப்படிப்பு - விண்ணப்பப்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பப்பதிவு கால அவகாசம் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, கால்நடை மருத்துவப்பட்டப்படிப்புக்கு 11,586 விண்ணப்பங்களும், பி.டெக் பட்டப்படிப்புக்கு 2,392 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வருகிற 28-ம் தேதி மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி