பீன்ஸ் கிலோ ரூ.170.. காய்கறி விலைகள் கிடுகிடு!

57பார்த்தது
பீன்ஸ் கிலோ ரூ.170.. காய்கறி விலைகள் கிடுகிடு!
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். கடத்த வாரத்தை விட நேற்று காய்கறிகளின் விலை உயர்த்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.32க்கு விற்கப்பட்ட 1 கிலோ கத்தரிக்காய் ரூ.50க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.40க்கும், ரூ.90க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.140க்கும், ரூ.56க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.66க்கும், ரூ.58க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.68க்கும், ரூ.120க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.170க்கும், ரூ.36க்கு விற்கப்பட்ட மாங்காய் ரூ.40க்கும், ரூ.60க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.90க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, ஈரோடு, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி