பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது, அவர் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். “ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் ஒதுக்கப்பட்ட நேரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வழங்கப்பட்டது. மைக் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறுவது முற்றிலும் தவறு” என்றார்.