ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை எனில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆளாக நேரிடும். TDS உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் வருமான வரியை உரிய நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம் அந்த தொகையை திரும்ப பெறலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். வரி சலுகைகள் கிடைக்காமல் போகலாம். எனவே அரசு நிர்ணயித்த காலத்திற்குள் ITR தாக்கல் செய்வது நல்லது.