தவாக தலைவர் வேல்முருகன், "வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது" என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக பேசினார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், "பட்ஜெட் கூட்டத் தொடரில் எங்களின் கோரிக்கைகள் குறித்த செயல் திட்டத்தை வெளியிட வேண்டும். இல்லையேல் கட்சி பொதுக்குழுவை கூட்டி, திமுக கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா என்று மறுபரிசீலனை செய்வோம்” என்றார்.