உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் - மதிமுக அறிவிப்பு

563பார்த்தது
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் - மதிமுக அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மதிமுக சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், உதய சூரியன் சின்னத்தில் இந்தமுறை போட்டியிடப் போவதில்லை என்றும் மதிமுகவின் பம்பரம் சின்னித்தில்தான் போட்டியிடுவோம் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மதிமுக கேட்கும் மாநிலங்களவை சீட் வழங்க திமுக முன்வராது எனவும் கூறப்படுகிறது. அதே போல் கடந்த முறை ஈரோடு தொகுதி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை திருச்சி தொகுதியை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி