மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு..?

64498பார்த்தது
மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு..?
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2019 தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை திருச்சி தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. திருச்சி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்று எம்.பி. ஆக உள்ளார். இந்த முறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கப்படாது என திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் கொமதேக - நாமக்கல் ஐயூஎம்எல் - ராமநாதபுரம் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சிபிஐ - திருப்பூர், நாகை..? சிபிஎம் - மதுரை, கோவை..? மதிமுக - திருச்சி..? விசிக - சிதம்பரம், விழுப்புரம்..?

தொடர்புடைய செய்தி