வீட்டுக் கடன் செலவை குறைக்கும் வழிகள்

5368பார்த்தது
வீட்டுக் கடன் செலவை குறைக்கும் வழிகள்
சொந்த வீடு வாங்க முயற்சிக்கும் போது வீட்டுக் கடன் செயல்முறையை சரியாக திட்டமிட வேண்டும். முக்கியமாக கடனுக்கான காலம் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அமைய வேண்டும். மாதத் தவணை சுமையை குறைக்க, நீண்ட காலத்தை நாட விரும்பலாம். எனினும், நீண்ட கால வாய்ப்பை நாடும் போது, மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் அதிகமாக இருக்கும். இளம் வயதினர் என்றால் வருமானம் உயரும் போதெல்லாம் தவணையை உயர்த்தலாம். இது, அசலை குறைத்து அதற்கேற்ப கடன் காலம், வட்டியை குறைக்க உதவும். வீட்டுக் கடன் என்பது நீண்ட கால பொறுப்பு என்பதால், அதனுடன் காப்பீடு பெறுவது அவசியம்.

தொடர்புடைய செய்தி