வயநாடு நிலச்சரிவு- காளிதாஸின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு
By Maheshwaran 75பார்த்ததுவயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.3 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கி கட்டட தொழிலாளி காளிதாஸ் உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.