கேரளா மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டில் அடுத்தடுத்து முண்டகை, சூரல்மலை, மேல்பாடி ஆகிய இடங்களில் நள்ளிரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளான சூரல்மலை கிராமத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.