வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்தது முதலே ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வருகிறேன். கேரள அரசுடன் எப்போதும் மத்திய அரசு துணை நிற்கிறது. நிதிப் பற்றாக்குறையால் எந்தப் பணியும் தடைபடாமல் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.