'வாக்கு இயந்திரம் தயாரிக்கும் இடத்தில் பாஜகவினர் நியமனம்'

68பார்த்தது
'வாக்கு இயந்திரம் தயாரிக்கும் இடத்தில் பாஜகவினர் நியமனம்'
மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள இயந்திரங்களில் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 22 லட்சம் வாக்குகளில் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி