புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை

56280பார்த்தது
புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு வரும் மார்ச் மாதம் வழங்கப்படும். இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டை பெற, ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.