திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்கும் விசிக

75பார்த்தது
திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்கும் விசிக
திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை ஒதுக்கக்கோரி விசிக கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் விசிக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 3 தனித் தொகுதி, 1 பொதுத்தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய விருப்ப தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளோம் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி