டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

56பார்த்தது
*விருதுநகரில் டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புடெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக மாவட்ட தலைவர் திருமலை தலைமையில்,

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய நோய் தொற்றுகளை தடுத்துவரும் டெங்கு ஒழிப்பு தொழிலாளர்களை தமிழக அரசு சுழற்சி முறையில் பணிநிறுத்தம் செய்வதை கைவிட்டு தொடர்ந்து பணி வழங்குவேண்டும், DBC தொழிலாளர்கள் அனைவருக்கும் பணியாளர் அடையாள அட்டை வழங்குவேண்டும்

தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7ம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கிட வேண்டும்

*வருங்கால வைப்புநிதி தொகை, பிடித்தம் செய்த விபரம் மற்றும் UAN, PF எண் உட்பட அனைத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், பணிபாதுகாப்பு, போதிய பணி, தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், சீருடை, பயணப்படி உள்ளிட்டவைகள தமிழக அரசு உடனடியாக வழங்குவேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதிலிருமிருந்து 100க்கும் மேற்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி