பார்வை அற்ற குழந்தைகளுக்கு பிரத்யேக பார்பி பொம்மை

50பார்த்தது
பார்வை அற்ற குழந்தைகளுக்கு பிரத்யேக பார்பி பொம்மை
பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென்றே கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மையானது, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியைப் பிடித்தவாறு இருக்கிறது. அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி, பார்வைத் திறனில்லை என்பதை உணர்த்தும் வகையில் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேட்டல் நிறுவனம் இதற்கு முன் 2022-ம் ஆண்டு காது கேளாதவருக்கான பார்பிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியுடன் பார்பி பொம்மைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி