நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 12.5 கோடி வசூலித்துள்ளது. தமிழில் இப்படம் 11 கோடி ரூபாயும் தெலுங்கில் 1.5 கோடி ரூபாயும் படம் வசூலித்துள்ளது. இந்தி ரசிகர்கள் மத்தியில் ராயன் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இருந்தபோதும் அங்கு படம் பெரியளவில் கல்லா கட்டவில்லை. தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் கர்ணனை முந்தியுள்ளது ராயன்.