அண்ணாதொழிற்சங்கம் சார்பாக வாயிற் கூட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்கம் விருதுநகர் மண்டல செயலாளர் குரு சந்திரன் தலைமையில் வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணா தொழிற்சங்க மாநில பொருளாளர் அப்துல் ஹமீது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி ஏ வை உடனடியாக வழங்க வேண்டும், பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய ஓட்டுநர்கள் நடத்துனர்களை உடனடியாக பணியமர்த்திட வேண்டும், வாரிசுதாரர்களுக்கு தகுதிக்கேற்ப உடனடி வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடியா திமுக அரசுக்கு எதிராக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் பணியின் பொழுது உயிரிழந்த அண்ணா தொழிற்சங்கத்தின் உறுப்பினர் விஜயகுமார் என்பவரின் குடும்பத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் விருதுநகர் மண்டலம் சார்பாக 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை அண்ணா தொழிற்சங்க மாநில பொருளாளர் அப்துல் ஹமீது வழங்கினார்.

தொடர்புடைய செய்தி