விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ரயில்வே நிலையத்தில் ரயில்வே சேவை குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் ரயில்வே மானாமதுரை ரயில்வே ஆய்வாளர் மதி அவர்கள் தலைமையில் இன்று ஜூலை 28 நடைபெற்றது இந்த கூட்டத்தில் ரயில்வே சேவை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட வீரசோழன் சிவபாலன் ராஜா பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன செங்கோட்டை டு சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் நரிக்குடி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நரிக்குடி சாலையில் முதல் ரயில்வே நிலைய சாலை வரை புது சாலை வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முறையான குடிநீர் ரயில்வே நிலையத்தில் வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது