சேலம்: சூரப்பள்ளியை சேர்ந்த முருகன்- பழனியம்மாள் தம்பதியின் மகள் ஹேமாஸ்ரீ (4). இவர்களின் உறவினர் சமையல் வேலை செய்யும் மண்டபத்திற்கு பழனியம்மாள், ஹேமாஸ்ரீயுடன் சென்றார். அங்கு பெரிய பாத்திரத்தில் பால் கொதித்துக் கொண்டிருந்த போது அதில் சிறுமி தவறி விழுந்தார். இதன்பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமாஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 18) உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.