ஸ்ரீநகரில் 5 பயங்கரவாதிகள் என்கவுன்டர்

67பார்த்தது
தெற்கு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள கதர் பகுதியில் இன்று (டிச., 19) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி