534 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கள ஆய்வு

79பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 01. 09. 2024 வரையிலான புள்ளி விவரங்களின்படி, மாவட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 130 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 மாணவர்களும்,

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 31 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 68 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 63 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 18 மாணவர்களும் என மொத்தம் 534 மாணவர்கள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி