நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில பொருட்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதில் முதலிடம் பிடிப்பது சோப்பு. சோப்பை பலர் பயன்படுத்தும் பொழுது அதில் சேரும் கிருமிகள் பிறருக்கு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நகம் வெட்டி, ரேஸர்களை பகிர்ந்து கொள்வது தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய் பரவலுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் முகம் துடைக்கும் துண்டு, பல் துலக்கும் பிரஷ், தண்ணீர் பாட்டில் போன்றவற்றையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.