தெலங்கானா சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகரை சேர்ந்த இளம் பெண் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது அங்கு வந்த பிரமோத் குமார் என்ற இளைஞர், அப்பெண்ணை தனியாக பேச அழைத்துள்ளார். அப்போது தன்னை காதலிக்கக்கூறி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுக்கவே தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் அந்த இளம்பெண் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த ஒரு இளைஞர் ஓடிவந்து பிரமோத் குமாரை அடித்து துவைத்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.