அரிசி, பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் வண்டு வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தும். எத்தனை டப்பாக்களை மாற்றினாலும் வண்டுகளின் தொல்லை தீராது. இதற்கு வரமிளகாயை வைத்து தீர்வு காணமுடியும். அரிசி, பருப்பு வைக்கும் டப்பாவில் நான்கு வரமிளகாய்களை போட்டு வைத்தால் அதன் காரத்தன்மைக்காக வண்டுகள் பூச்சிகள் வராமல் இருக்கும். அதேப்போல் உளுந்தம் பருப்பு வைக்கும் டப்பாக்களில் வரமிளகாய்களுடன் சேர்த்து சிறிது மிளகாய் தூளும் போட்டு வைக்கலாம்.