2018-ல் உச்சநீதிமன்றம் குணப்படுத்தவே முடியாத, தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளதாக தீர்பளித்து இருந்தது. இதை அடிப்படையாக வைத்து கர்நாடக மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான எச்.பி.கரிபசம்மா (85) கருணைக் கொலை செய்யப்பட இருக்கிறார். முதுகுத் தண்டுவடம் பிரச்சனை காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னல்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் கருணை கொலை செய்யப்பட இருக்கிறார்.