ஸ்ரீவில்லிபுத்தூரில் வணிக வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம். மக்கள் அவதி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டம். கடந்த 25 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நடத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிக பயன்பாட்டிற்குரிய வாடகை கட்டிடங்களுக்கு 18% R CM /FCM முறையில் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இன்று நகர் பகுதியில் முழுவதும்வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் மளிகை, காய்கறி, அரிசி, தேனீர்,
செல்போன் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூர்களில் இருந்து தங்கி வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சாப்பிட உணவகங்கள் முழுவதும் மூடப்பட்டதால் சிரமமடைந்தனர். மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதை கைவிட வேண்டும் வணிகர்களின் வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.