மனைவிக்குத் தெரியாமல் கணவரோ, கணவருக்கு தெரியாமல் மனைவியோ விவாகரத்துப் பெறாமல், இரண்டாவது திருமணம் செய்தால் அது இந்திய திருமணச் சட்டத்தின் படி செல்லாது. இதை மீறி திருமணம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். BNS-82(2) என்ற சட்டப்பிரிவின் படி முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.