நாட்டின் முக்கிய சுற்றுலா மையமான கோவாவுக்கு, வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 2014ல் 60 லட்சமாக இருந்த எண்ணிக்கை, 2023ல் 15 லட்சமாக சரிந்துள்ளது தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் கடற்கரை நகரங்கள் மேம்பட்ட உள்கட்டமைப்பை கொண்டிருப்பதால் வெளிநாட்டவர்களின் சுற்றுலா தேர்வு கோவாவில் இருந்து மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்றளவும் இந்திய இளைஞர்களின் கனவு தேசமாக கோவா உள்ளது.