விருதுநகர் அருகே சூளக்கரை வீர பெருமாள் கோவில் தெருவை சார்ந்த ராமமூர்த்தி இவர் நேற்று விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்