டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஜட்டிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியாத்தில் இருந்து வந்த 2 பயணிகளை சோதனை செய்தபோது, அவர்களின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருந்துள்ளது. பின் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.