சிவகாசி: 8 சதவீத பசுமை பரப்பு மட்டுமே உள்ளது. மாவட்ட ஆட்சியர்.

65பார்த்தது
சிவகாசியில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்4 ஆயிரம் மரக்கன்று 3ஆயிரம் பனை விதைகளை நடும் பணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் (அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி) தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமைத் தமிழக தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையேற்று 4000 மரக்கன்றுகள், 3000 பனை விதைகள் நடும் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் இயற்கை பாதுகாப்போம் வேம்பு புங்கை உள்ளிட்ட 4000 மரக்கன்றுகளையும், 3000 பனை விதைகளையும் நடும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது 50 சதவீதம் பேர் நகர்ப்புற பகுதியில் வாசிப்பதாகவும் 2040ல் 90 சதவீதம் மக்கள் நகர்ப்புற பகுதியில் வசிக்கும் நிலை ஏற்படும் எனவும் அதற்கு ஏற்ப பசுமை பரப்பை விரிவாக்கம் செய்வது அவசியம் என்றார். மேலும் சராசரியாக நாம் வாழுமிடத்தில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் வெறும் 8 சதவீத பசுமை பரப்பு மட்டுமே உள்ளதாகவும் பசுமை பரப்பை அதிகரிக்க அனைவரும் மரம் நடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி