சிவகாசி: நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்....

70பார்த்தது
சிவகாசியில் மாநகராட்சி சார்பாக மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்.
விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி மாநகராட்சியில் மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர்.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்களை சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சிவகாசி மாநகராட்சியில், பஸ் ஸ்டாண்டு, சமுதாய மண்டபம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் திருத்தங்கல் 1வது மண்டல அலுவலகம், 2வது மண்டல அலுவலகம் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. இந்த முகாமில் சமூக நலத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மனு பெற்று பதிவு செய்தனர். திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாமை திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகராட்சி 1வது வார்டு கவுன்சிலரும் திமுக பகுதி கழக செயலாளருமான அ. செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி