சிவகாசி அருகே கொடூர செயலில் ஈடுபட்ட வாலிபர். மாடியில் துணி காயப்போட சென்ற
இளம் பெண் கற்பழிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே பூலாவூரணி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது வீட்டில் மொட்ட மாடியில் துணிகளை காய வைக்க சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைப்பாண்டி (35) என்பவர் இளம் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் மாரனேரி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பிச்சைபாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்