கோதுமையில் நிரம்பியுள்ள க்ளூட்டன் என்னும் பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. க்ளூட்டனை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வீக்கம், எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கோதுமைக்கு மாற்றாக தினையை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் எடையை நிர்வகிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் தினை உதவுகிறது. கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைவான உணர்வை தினை உணவுகள் தருகிறது.