சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் வயதான தம்பதி வசித்து வந்தனர். 80 வயதான கணவர் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் அவர் மனைவி நேற்று (நவ. 26) துக்க வீட்டிற்கு சென்றார். பக்கத்து வீட்டு நபர்களிடம் தன் கணவரை பார்த்து கொள்ளும்படி கூறினார். அவர் வீடு திரும்பிய போது கணவர் உயிரிழந்ததோடு அவர் இறந்த பின்னர் 2 நாய்கள் வந்து சடலத்தை கடித்து குதறியது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் விசாரிக்கிறது.