கானா பாடகி இசைவாணி பாடிய 'ஐ யாம் சாரி ஐயப்பா' என்ற பாடல் வீடியோ அண்மையில் வைரலானது. இதன் மூலம் ஐயப்பனை இசைவாணி அவமதித்துவிட்டதாக அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் போலீஸில் புகார் அளித்துள்ளன. இந்நிலையில் இசைவாணிக்கு திருமாவளவன் ஆதரவளித்துள்ளார். "இசைவாணி பாடிய பாடல் மதத்தை, மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கில் இல்லை, அதானி பிரச்னையை திசை திருப்ப இதை பெரிதுபடுத்துகிறார்கள்" என்றார்.