ரயில்களில் தொடர் கைவரிசை காட்டி வந்த சென்னை கிண்டியைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பயணிகளுக்கு அச்சுறுத்தை ஏற்படுத்தியதோடு, அவர்களின் உடமைகளை திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.