காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான், சிரியா போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிரியாவின் டமாஸ்கஸுக்கு தெற்கே ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான குடியிருப்பை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தளபதி, சிரியாவைச் சேர்ந்த நான்கு பொதுமக்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.