2025க்குள் புதிய ஸ்மார்ட் போன் வாங்கலாம் என்று நினைத்தவர்களுக்கு நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளன.
ஸ்மார்ட்போன்கள் 'ஸ்மார்ட்' ஆக மாறி வருவதே இதற்கு காரணம். ஃபோன் தயாரிப்பு உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு, 5ஜிக்கு முழுமையாக மாறுதல் மற்றும் ஏஐயின் புதிய பதிப்புகள் போன்றவற்றால் ஸ்மார்ட்போனின் விலை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சராசரி விற்பனை விலை இந்த ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இது 5 சதவீதமாக அதிகரிக்கும்.