சிவகாசி அருகே முதியவர் மர்ம சாவு. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (75). இவர் சிவகாசி தேரடி முக்கில் வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு முதியவர் வெள்ளைச்சாமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். முதியவர் சாவு குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.