சிவகாசி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற பன்னாட்டு கருத்தரங்கம்...

72பார்த்தது
சிவகாசியில்“கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நடத்திய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி SFR மகளிர் கல்லூரியில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சிவகாசி தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி இணைந்து “கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நடத்திய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நிகழ்ச்சியினை, இணை இயக்குநர் முனைவர் சங்கரசரவணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கில் “கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்” என்ற தலைப்பில் நூலினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் பேசியபோது, வாசிக்கத்தக்க கூடிய அளவிற்கு மிகுந்த வாசிப்பு சுவையோடும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து இளைஞர்களுக்கான பதிவுகள் எங்கிருக்கின்றது. அதில் கவிப்பேரரசு என்ன சொல்ல வருகின்றார் என்பதை எடுத்துக் கூறும் வகையில் தான் இந்த கருத்தரங்கின் பொருண்மை அமைகிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் திலகவதி,
செயலர் அருணா, கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய், தமிழ் துறைத்தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி