ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6 லட்சம் பறிமுதல்

1068பார்த்தது
ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6 லட்சம் பறிமுதல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்
சங்கரலிங்கம் , தேர்தல் பறக்கும் படை காவலர்கள் சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தனிக்கையில் இருந்த போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தை ஓட்டி வந்த தனிப்புலிநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெஸ்குமார் என்பரிடம் இருந்த ரூ. 6 லட்சத்திற்கு எந்த வித ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து
சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி