பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.