நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளைத் தாண்டி வெள்ளைப் பூண்டு அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் வெள்ளைப் பூண்டு கிலோ 500 ரூபாய் வரையிலும் விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பூண்டு விளைச்சல் சற்று குறைவாக உள்ளது. இருப்பினும் கிலோ 250 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.